Tuesday, 23 July 2013

காதலி

இப்படி ஒரு காதலி கிடைத்தால்
அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..

1)   உங்களை சந்திக்க நீண்ட தூரம்
பயணம் செய்து கால் வலிக்க அவள்
காத்திருப்பாள்.

2)   அவள் மீது தவறே இல்லாவிட்டாலும்
உங்களுடன் சமாதானம் ஆக
அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.

3)   உங்கள் வார்த்தை தரும் வலியில்
கண்ணீர் வடிந்தாலும்
அடுத்தகனமே புன்னகையில்
அதை மறைத்திடுவாள் .

4)   நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தா
அதை பொருட்படுத்தாமல் உங்கள்
மீது கொண்டநேசம் மட்டும் குறையாமல்
பார்த்துக்கொள்வாள்.

5)   இருவரும் விவாதிக்கும் விடயத்தில்
அவள் சொல்லும் கருத்து சரியாக
இருக்கும் போதிலும்
விவாதத்தை தொடராமல்
முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள்
உறவு முறிந்து போகாமல் இருக்க.
6)சிறு சிறு குறும்புகள்
செய்தேனும்உங்கள ை சிரிக்க வைக்க
முயற்சிப்பாள்.நீங்கள்
அவளுக்கு எத்தனை முக்கியமானவர்
என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்.

7)  நீங்கள் சந்தோசமாக இருக்கும்
தருணத்தில் அவள் கவலையாக
இருந்தால் ,அதைப் பகிர்ந்து உங்கள்
சந்தோசம் கெட்டு விடக்
கூடாதென்று கவலைகளைக் கண்ணில்
மறைப்பாள்.

8)  உங்களின் ஒரு சில
முரட்டு குணங்கள்
அவளை பாதித்தாலும்
உங்களை விட்டு விலகும் எண்ணம்
இல்லாதவளாய் இருப்பாள்.
9)  உங்கள் குடும்பத்திலும் நண்பர்
வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும்
நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள்.

10)  நீங்கள் தொலைப் பேசியில்
அழைக்காவிட்டாலு ம் அவள்
அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும்,
அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும்
உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக்
கொள்வாள்.



Thursday, 4 July 2013

சிறுசிறு அர்த்தமற்ற பேச்சுகள்


சிறுசிறு அர்த்தமற்ற பேச்சுகள் 
தான் ....
உறவுகளில் பாலமாம் ..!!!!
ஆனால் இங்கோ ...
பல உறவுகளில்
மௌனமே விரும்பி ...
ஏற்கப்பட்ட சிலுவைகளாக
உள்ளது ..!!! 


                                        

Tuesday, 2 July 2013

உதயாவும் அத்தை பெண்ணும்

        
        வாசலில் கால் வைக்கும் போதே உதயாவுக்கு புரிந்து விட்டது , வீட்டில் அத்தையும் மாமாவும் இல்லை என்பது . அழகிய அத்தை பெண் சாரா மட்டும் தனியே உட்கார்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தாள். விடுமுறை நாள் என்பதால் கை இல்லாத டாப்சும், முழங்கால் தொடாத குட்டி மிடியும் அணிந்து லூஸ் ஹேரோடு ஹாயாக இருந்தாள். திடிரென உதயாவுக்கு அந்த எண்ணம் தோன்றியது. சத்தமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து சாராவை பின்புறமாக மெல்ல நெருங்கி கண்களை பொத்தி அலேக்காக தூக்கிக்கொண்டு படுக்கை அறைக்குள் நுழைந்தான் . அவன் கை பட்ட உடனே அது உதய்தான் என்று புரிந்து கொண்ட சாரா எதிர்ப்பு தெரிவிக்காமல் ' இன்றைக்கு புதிதாக என்ன செய்ய போகிறான்' என்ற ஆவலோடு காத்திருந்தாள். அவளை பூப்போல படுக்கையில் கிடத்தியவன் , ஒரு பெரிய போர்வை எடுத்து இருவரையும் போர்த்தி கொண்டான் . சில வினாடி நிசப்தத்துக்கு பிறகு மெல்ல தன இடது கையை தூக்கி காட்டி சாராவிடம் சொன்னான் ' இதுதான் எங்க அப்பா எனக்கு வாங்கி குடுத்த ரேடியம் வாட்ச் , இருட்டுல கூட எவ்ளோ பளிச்சுன்னு தெரியுது பாரு . நாளைக்கு schoolukku போகும் பொது நீயம் உங்க மம்மி கிட்ட கேளு. என்ன..... :P


                                      

Tuesday, 18 June 2013

மகிழ்ச்சி

"உண்மைக்கதை"

மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!

கணவன்: என்ன?

மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!

மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….

கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..

(மறுநாள் இரவு)

கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?

மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு???

கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…

மனைவி: ம்ம்… எப்படி டா!!!

கணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…

நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…

மனைவி: நரகமா???

கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி?????

(வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்சி!

                                  

Sunday, 16 June 2013

கடவுளுக்கு ஒரு கடிதம்

குட்டி கதை :

அமெரிக்க சிறுவன் ஒருவனுக்கு பயங்கர
பணகஷ்டம். அவனுக்கு ஒரு அம்பது டாலர்
தேவைப்பட்டது. கடவுளிடம் வெகு நாளாக
வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்குஆகவில்லை.
கடைசியாக பணம் தர
வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான்.
உறையின் மேல் கடவுள்,
அமெரிக்கா என்று எழுதி தபாலில்
சேர்த்து விட்டான். பட்டுவாடா பண்ண வேண்டிய
தபால் அதிகாரிகள் இந்த
கடிதத்தை பார்த்து ஆச்சரியபட்டார்கள்.
ஒரு ...விளையாட்...ட ாக
அதை வெள்ளை மாளிகை...க்கு அனுப்பி வைத்தார்கள்.
புஷ்ஷுக்கு ஒரே ஆச்சர்யம். "சரி.. இந்த
பையனுக்கு உதவுவோம்.
ஆனால் ஒரு சிறு பையனுக்கு அம்பது டாலர்
எல்லாம் அதிகம். எனவே இருபது டாலர் மட்டும்
அனுப்புவோம்" என்று அனுப்பி வைத்தார். பணம்
கிடைத்தவுடன் பையனுக்கு குஷி தாளவில்லை.
நன்றி தெரிவித்து கடவுளுக்கு ஒரு கடிதம்
எழுதினான். "ரொம்ப நன்றி கடவுளே.. நான்கேட்ட
மாதிரி பணம் அனுப்பி வச்சுட்டீங்க..
ஆனாலும்.. நீங்க அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஆபீஸ்
மூலமா பணம் அனுப்புனத நான் கவர
பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்....
தயவு செஞ்சு இனிமேல் அப்படி அனுப்பாதீங்க..
நீங்க அனுப்புன காசுல பாதிய அந்த புஷ்
திருடிட்டான்.


                                 
                                                

Tuesday, 4 June 2013

மீண்டும் மீண்டும் அவன்!!!

(படித்ததில் என்னை மிகவும் உருகவைத்தது.)

மீண்டும் மீண்டும் அவன்!!!

பேருந்தில் மிதமான கூட்டம் இருந்தது. திடீரென ஒரு சத்தம். “பளார்.” பளார் என்ற அந்த சத்தம் வந்த திசையில் பார்த்தேன். அவன் கன்னத்தில் கை வைத்தபடி நின்றிருந்தான். அறைந்தது அவளாகத்தான் இருக்கவேண்டும். நானும் ஒரு வாரமாக கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். அவள் ஏறும் பேருந்து நிறுத்தத்தில் ஏறுவான். அவளுக்கு பின்னால் போய் நின்றுகொள்வான். இதுவரை அவன் ஒரு நாள் கூட டிக்கெட் எடுத்ததில்லை. அவனுக்கு பதினெட்டு வயதிருக்கவேண்டும். ஒரு கசங்கிய சட்டை அணிந்திருந்தான். அழுக்கான ஜீன்ஸும் செம்பட்டை தலையும் ஒரு பிக்பாக்கெட்டை நினைவுபடுத்தியது.
முகத்தில் வயது கோளாறை பிரதிபலிக்கும் பருக்கள். அவளுக்கு நாற்பது வயதுக்குள் தான் இருக்கும். சுமாரான அழகு.

அவளிடமிருந்து அடி வாங்கிய பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தான். அதற்குள் இன்னொரு புண்ணியவதி எழுந்து..."என்ன பாத்துட்டு இருக்கீங்க....புடிச்சு வெளிய தள்ளுங்க...பொம்புளைங்கள உரசரதுக்குன்னே வர்றானுங்க....” என்றபடி அவனை நோக்கி பாய்ந்தாள். அவன் தலை குனிந்துகொண்டான். அவன் முகத்தில் அவமானம். இந்த காரியத்தை செய்தது அவனல்ல. அவனுடைய வயது. இந்த வயதின் பலவீனத்தை என்னை போல் ஒரு சைக்காலிஜிஸ்ட் தான் தெரிந்து வைத்திருக்க முடியும். எனக்கு அவன் தோள் மேல் கை போட்டு அவனுடன் அன்பாக ஆதரவாக பேசவேண்டும் போல் இருந்தது. தாய்ப்பால் குடிக்கிற போது தோன்றாத காமம் கன்ட்ராவி எல்லாம் இந்த இரண்டாங்கெட்டான் வயதில் தான் தோன்றுகிறது. சரியான புத்தி மதியும் குடும்ப சூழலும் இல்லாமல் மனதின் இழு சக்திக்கு பலி ஆகும் வாலிபர்கள் எத்தனை பேர். எனக்கு தெரியும். அந்த பெண்ணின் கோபத்துக்கு ஒரு ஞாயம் இருப்பது போல் இவனுடைய தாபத்துக்கும் ஒரு ஞாயம் இருக்கும்.

"என்ன சார் பாத்துட்டு இருக்கீங்க. காது மேல ரெண்டு போட்டு அடிச்சு வெளிய தள்ளுங்க" என்று அந்த அதிவீர பெண்மணி தொடர்ந்து ஆண்களை உசுப்பி விட்டபடியே இருந்தாள்.
நல்ல வேளையாக, பத்து பேர் சேர்ந்து கும்பலாக ஒருவனை அடிக்கிறபோது அதில் பதினொன்றாக தன்னையும் சேர்த்துக்கொண்டு தங்கள் வீரத்தை நினைவுபடுத்திக்கொள்ளும் கோழை ஆண்கள் யாரும் அந்த பேருந்தில் இல்லை. யாரும் அவனை அடிக்க தயாராய் இல்லை. நடத்துனர் விசில் ஊதினார். பேருந்து நடுவழியில் நின்றது. அவன் யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்கவில்லை. தலை குனிந்தபடி கன்னத்தை தடவிக்கொண்டே நடக்க மட்டுமே வரம் பெற்ற ஒரு சவம் போல் அந்த பேருந்தை விட்டு கீழே இறங்கினான். அனைவரும் அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொண்டார்கள். அது அவன் மேல் கொண்ட மரியாதையினாலோ பயத்தினாலோ அல்ல சாக்கடை தண்ணீர் நம் மேல் தெறித்துவிடாமல் ஒதுங்கிக்கொள்கிற எச்சரிக்கை. நான் அவனையே இரக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த துள்ளல் அதிவீர பெண்மணி ஜன்னல் வழியாக கை வீசி ஏதோ ஆவேசமாக அவனை திட்டிக்கொண்டிருந்தாள். துப்பவும் செய்தாள். அறை கொடுத்தவள் மௌனமாக நின்றிருந்தாள். அவள் தான் செய்த காரியத்துக்காய் வருத்தப்பட்டிருக்கலாம்.

ஒரு வாரம் கழித்து மீண்டும் அவனை பார்க்க நேர்ந்தது. இப்போது ஒரு திரைப்படத்தின் இடைவேளையின் போது. பாப்கார்ன் வாங்கி ஒவ்வொன்றாக வாய்க்குள் எறிந்துகொண்டிருந்தேன். அப்போது மேனேஜர் அறையிலிருந்து அவனை இரண்டு போலீஸ்காரர்கள் காளரை பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார்கள். ஐந்தாறு பேர் பின் தொடர்ந்து வந்தார்கள். போலீஸ்காரர் "ஸ்டேஷனுக்கு வந்து கம்பிளைன்ட் கொடுங்க" என்றார். மேனேஜர் அரை அடிக்கு குனிந்து போலீஸ்காரரிடம்...
"சார் கம்பிளைன்ட் வேண்டாம் சார். தியேட்டர் பேரு கெட்டுடும். சும்மா விசாரிச்சு மிரட்டி அனுப்பிடுங்க " என்றார். போலீஸ்காரர்கள் எப்படி விசாரிப்பார்கள் எப்படி மிரட்டுவார்கள் என்று எனக்கு தெரியும். ஒரு பலி ஆட்டை போல் அவன் நின்றுகொண்டிருந்தான். எல்லோர் பார்வையும் அவன் மேல் படிந்திருந்தது. என் அருகில் இரண்டு சிறுமிகள் நின்றுகொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி மற்றவளை பார்த்து

"திருடன்...திருடன்...எப்படி இருக்கான் பாரேன். பாக்கவே பயமா இல்ல....அதான் போலீஸ் புடிச்சிட்டு போகுது" என்றாள்.

எனக்கு இப்போதும் அவன் மேல் பரிதாபம் இருந்தது. என்னை பொறுத்தவரை அவன் ஒரு குற்றவாளி அல்ல. நோயாளி. அவன் தண்டிக்கப்படவேண்டியவன் அல்ல. குணப்படுத்தப்பட வேண்டியவன். அவனுக்கு தேவை போலீஸ்காரர்களின் லட்டி அடியும் பூட்ஸ் மிதியும் அல்ல. அன்பான அரவணைப்பான வைத்தியம்.

கூட்டத்தில் இன்னொருவர்

"என் ஒயிப் வந்து கம்பிளைன்ட் கொடுக்க முடியாது சார். ஷீ இஸ் எ சென்ட்ரல் கவர்மென்ட் எம்பிளாயி. டீசன்ட் பேமிலி சார். நீங்க இவன இப்படியே விட்டுட்டா கூட கவலை இல்ல. ஆனா கம்பிளைன்ட் வேண்டாம் சார்." என்று மன்றாடினார்.

“சரி விடுங்க. கம்பிளைன்ட் எல்லாம் வேண்டாம். இந்த பொறுக்கிய நாங்க பாத்துக்கறோம்”

என்று போலீஸ்காரர் எல்லார் முன்னிலையிலும் அவன் கன்னத்தில் "பளார்" என்று அறைந்தார். அந்த பளாரின் அதிர்ச்சியில் அருகிலிருந்த இரண்டு பெண்களுக்கு கைகள் உதறுவதை கவனித்தேன். உதறலில் பாப்கானில் இரண்டும் சில துளி கொக்ககோலாவும் தரையில் சிந்தியது. அந்த பெண்கள் அதற்கு மேல் காத்திராமல் தியேட்டருக்குள் ஓடினார்கள்.

இப்போது போலீஸ் அவனை இழுத்துக்கொண்டு கீழே போனது. கூட்டம் கலைய தொடங்கியது. சிலர் மட்டும் என்ன நடந்தது என மேனேஜரிடம் விசாரித்தார்கள் .அவர் யாருக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை. அதற்குள் படம் போட்டுவிட்டார்கள். இப்போது தான் அந்த பெண்மணியை கவனித்தேன். அவள் தான். பேருந்தில் அந்த பையனை கன்னத்தில் அறைந்தவள். மீண்டும் அவளையே தொடர்ந்து வந்து தொந்தரவு செய்திருக்கிறான். தியேட்டர் இருட்டில். அவள் மெல்ல நடந்து வந்து கணவன் அருகில் நின்றுகொண்டாள் எல்லோர் பார்வையும் அவள் மேல் நிலைபெற்றிருந்தது.....

"படம் வேண்டாங்க....வீட்டுக்கு போலாம்.... எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்க...."
என்றாள். அவர்கள் இருவரும் கீழே இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து தியேட்டரின் கேட்டை தாண்டி போகும் வரை அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

மீண்டும் இரண்டு வாரம் கழித்து அவனை சந்தித்தேன். இப்போது அதே பேருந்தில். அந்த பெண்மணியின் அருகில் தான் அவன் நின்றிருந்தான். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. திடீரென பேருந்தில் செக்கிங் வந்துவிட்டார்கள். ஒவ்வொருவராக டிக்கெட்டை எடுத்து காட்டிக்கொண்டிருந்தோம். பரிசோதகர் அவனிடம் வந்தார்.
“டிக்கெட் எடு.”

அவன் மௌனமாய் இருந்தான்.

“டிக்கெட் எடுக்கலையா....எங்கேயிருந்து வற கீழே இறங்கு....”

அவன் முதுகை பிடித்து பரிசோதகர் தள்ளினார்.

எல்லோரும் அதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தோம்.
அப்போது அந்த பெண்மணி பேசினாள்.

“சார்...அவன் ஊம சார்.....அவனுக்கும் சேத்து நானே டிக்கெட் எடுத்துட்டேன். இதா சார்.”

என்று ஒரு டிக்கெட்டை பரிசோதகரிடம் நீட்டினாள். அவர் டிக்கெட்டின் மேல் ஒரு டிக் அடித்து அவனுடைய கையில் திணித்தார். அவன் கவனமில்லாமல் அதை வாங்கி தன் சட்டை பையில் போட்டுக்கொண்டான். பேருந்து புறப்பட்டது.

இரண்டு வாரம் கழித்து மீண்டும் அவனை சந்தித்தேன். மெரினா பீச்சில். கடலுக்கு மிக அருகில் கடலை பார்த்தபடி நின்றிருந்தான். நான் அவனிடமிருந்து இருபதடி தூரத்தில் அமர்ந்திருந்தேன். திடீரென அவன் கையிலிருந்து ஏதோ ஒன்று தவறியது. காற்றில் அது பறக்கத்தொடங்கியது. அவன் அதை பின் தொடர்ந்து வந்தான். ஒரு இடத்தில் கீழே விழுந்தது. குனிந்து எடுப்பதற்குள் அது மீண்டும் பறந்தது. காற்றில் பறக்கும் அந்த காகிதத்தை, வானத்தை அண்ணாந்து பார்த்தபடி பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தான். அந்த காகிதம் என் அருகில் என் காலடியில் விழுந்தது. அதை நான் எடுத்தேன். அவன் என்னை நோக்கி இப்போது ஓடி வந்துகொண்டிருந்தான்.
அந்த காகிதத்தை பார்த்தேன். அது ஒரு பேருந்து பயணச்சீட்டு.
அதன் பின்புறத்தில் குட்டி எழுத்துக்களால் இவ்வளவும் எழுதியிருந்தது.

“உன்னை குப்பை தொட்டியில் எறிந்த நான் பாவி. என் சுயநலத்துக்காக உன்னை அனாதை ஆக்கிவிட்டேன். என்னை மன்னித்துவிடு. தயவு செய்து என்னை பின் தொடராதே. என் கணவருக்கு நீ வந்த பாவ வாசல் தெரியாது. என்றும் உன் நினைவோடு உன் அம்மா.”

அவன் அந்த காகிதத்தை என் கையிலிருந்து கவனமாக வாங்கி சட்டை பைக்குள் வைத்துக்கொண்டான். அதன் பிறகு அவன் அந்த பேருந்தில் வருவதில்லை.

Wednesday, 22 May 2013

மெட்டி அணிவது ஏன்

                                                 

மெட்டி அணிவது ஏன்

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.. ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.